உலகம்

பேட்டரியை விட 30 மடங்கு அதிகம் சேமிக்கும் புதிய மின்கருவி கண்டுபிடிப்பு: லண்டன் விஞ்ஞானிகள் சாதனை !

லண்டனில் உள்ள ராணி மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பாலிமர் பிலிம்கள் மூலம் புதிய டைஎெலக்ட்ரிக் கெபாசிடர் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

சி.பி.சரவணன்

லண்டனில் உள்ள ராணி மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பாலிமர் பிலிம்கள் மூலம் புதிய டைஎெலக்ட்ரிக் கெபாசிடர் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் பாலிமர் பிலிம்கள், டை எெலக்ட்ரிக் கெபாசிடரை சுற்றி பல அடுக்குகளாக சுற்றப்பட்டு அழுத்தப்பட்டுள்ளன. தற்போது, சந்தையில் கிடைக்கும் டை எலக்ட்ரிக் கெபாசிடரை விட, பாலிபர் பிலிம்கள் சுற்றப்பட்ட டை (biaxially oriented polypropylene) எலெக்ட்ரிக் கெபாசிடர் 30 மடங்கு அதிகமாக மின்சாரம் சேமிக்கிறது. பேக்கரிகளில் பப்ஸ் தயாரிக்க, மாவு, பல அடுக்குகளாக மடிக்கப்பட்டு அழுத்தப்படும். 

அதைப் பார்த்து பாலிமர் பிலிம்களை பல அடுக்குகளாக, டை எலக்ட்ரிக் கெபாசிடர் சுற்றி, அதிக சேமிப்பு திறனுள்ள கருவியை உருவாக்கும் ஐடியா கிடைத்ததாக ராணி மேரி மைய விஞ்ஞானிகள் தலைமை டாக்டர் எமிலியானோ பிலோட்டி,( Dr Emiliano Bilotti)தெரிவித்துள்ளார். 

இது குறித்த ஆய்வுக் கட்டுரை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. சூரிய மின்சக்தி, மற்றும் காற்றாலை மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை, குறைந்த செலவில் சேமிக்க இந்த புதிய கண்டுபிடிப்பு வழிவகுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிடுக்கான பியூட்டி... ரேஷ்மா!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க்கின் இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கையும் சமர்ப்பிப்பு!

மகாராஷ்டிரத்தில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

இஸ்ரேல் போர்நிறுத்தத்துக்கு பகலில் சம்மதம்; இரவில் தாக்குதல்!

ரோஹித் சர்மா கேப்டனில்லை; இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!

SCROLL FOR NEXT