உலகம்

சீனாவின் உரிமைப் பிரதேசத்தை இந்தியா தனது நிர்வாகத்துக்குள் சேர்பதற்கு சீனா எதிர்ப்பு!

DIN


இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் 31ஆம் நாள் முதல் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. அவற்றுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பதவி ஏற்றனர். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங்சுவாங் வியாழக்கிழமை இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் பேசுகையில், "உள்நாட்டு சட்டத்தைத் திருத்தி, நிர்வாக பிரதேசத்தை உருவாக்கும் இந்தியத் தரப்பின் ஒரு சார்பு நடவடிக்கை. இது சீனாவின் இறையாண்மைக்கு அறைகூவல் விடுப்பதாக உள்ளது. இதற்குச் சட்டத் துறை ஆதரவு கிடைக்காது. தொடர்புடைய பிரதேசங்கள் சீனாவின் உண்மையான கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உண்மையையும் மாற்ற முடியாது" என்று சுட்டிக்காட்டினார்.

இரு நாட்டு எல்லைப்பகுதியின் அமைதியைப் பேணிக்காத்து, எல்லைப் பிரச்சினையின் தீர்வுக்காக உரிய நடவடிக்கைகளை அமைக்க வேண்டும் என்று சீனா இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT