உலகம்

சீன ஊடகக் குழுமத்தின் யாங்சி ஆற்றுக் கழிமுகத்துக்கான பிராந்தியத் தலைமையகம்

சீன ஊடகக் குழுமத்தின் யாங்சி ஆற்றுக் கழிமுகத்துக்கான பிராந்திய தலைமையகம் மற்றும் ஷாங்காய் தலைமையகம் செப்டம்பர் 26-ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டன.

DIN

சீன ஊடகக் குழுமத்தின் யாங்சி ஆற்றுக் கழிமுகத்துக்கான பிராந்திய தலைமையகம் மற்றும் ஷாங்காய் தலைமையகம் செப்டம்பர் 26-ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், ஷாங்காய் நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளருமான லீச்சியாங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹாய்சியோங் உள்ளிட்டோர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

எட்டு மாடிகளைக் கொண்ட யாங்சி ஆற்று கழிமுகப் பிராந்தியத் தலைமையகத்தின் மொத்தப் பரப்பளவு 2 லட்சத்து 65 ஆயிரம் சதுர மீட்டராகும். பதிப்புரிமை, விளையாட்டுத் தொழிற் துறை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மொழிப்பெயர்ப்பு, பண்பாட்டு நிகழ்ச்சி தயாரிப்பு உள்ளிட்ட அலுவல்கள் அங்கு மேற்கொள்ளப்பட உள்ளன.

சீன ஊடகக் குழுமமும், ஷாங்காய் மாநகர அரசும், தேசிய அளவில் பல்வேறு மொழியிலான திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மொழிப்பெயர்ப்புத் தளம் பற்றிய ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன.

தகவல்: தமிழ்ப் பிரிவு, சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

கனவில் வாழ்பவள்... பரமேஸ்வரி!

அழகின் சம்மேளனம்... சமந்தா!

SCROLL FOR NEXT