உலகம்

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 932 பேர் பலி

DIN

ஸ்பெயினில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பல நாடுகளில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 54 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

இதில் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 932 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, வியாழக்கிழமை 950 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஸ்பெயினில் இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உயிரிழப்பு 10 ஆயிரத்து 935. மீட்கப்பட்டவர்கள் 30 ஆயிரத்து 513 பேர். ஸ்பெயின்  சுகாதார அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT