உலகம்

சீனாவின் நோய் தடுப்பு நடவடிக்கை பயனுள்ளதாக உள்ளது: சர்வதேச சமூகம் கருத்து! 

DIN

சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள சீன மருத்துவ நிபுணர் குழுக்கள் அங்கு நோய் தடுப்பு முறைகளை பயனுள்ள முறையில் செய்து வருகின்றன. கடந்த சில நாட்களில், சீனா பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் கற்றுக்கொள்ளத்தக்கவை என்று பல்வேறு தரப்புகள் தெரிவித்துள்ளன. .

பாகிஸ்தானின் ஒரு ராணுவ மருத்துவமனையின் தலைவர் கூறுகையில், சீன மருத்துவ நிபுணர்கள் குழுவின் வருகை எங்களைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமாக இருக்கிறது. சீன நிபுணர்களின் முன்மொழிவின்படி, எமது மருத்துவச் சிகிச்சை முறையை மாற்றுவோம் என்று கூறினார்.

வெனிசுல தரப்புக் கூறுகையில், எமது தற்போதைய நோய் தடுப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சை நடவடிக்கைகள் சீனாவின் அனுபவங்களை முழுமையாகப் பயன்படுத்தி, சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளன என்று தெரிவித்தது.

ஜெர்மனி எசன் பல்கலைக்கழகத்தின் முதன்மை மருத்துவர் ஒருவர் கூறுகையில், வூஹானின் மருத்துவர்கள் புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பில் அதிகமான அனுவபங்களைக் கொண்டுள்ளதால் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

SCROLL FOR NEXT