உலகம்

கோவாவில் மேலும் ஒருவருக்கு கரோனா உறுதி: பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

DIN

பனாஜி: கோவாவில் மேலும் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாடு சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே தெரிவித்துள்ளார். 

பனாஜியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள செயின்ட் எஸ்டேவம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்ததாகக் கூறினார். 

இதையடுத்து அவருக்கு கொவைட் 19 அறிகுறிகள் இருந்ததாக கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

தெற்கு கோவாவில் நியமிக்கப்பட்ட கொவைட்-19 மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் கூறியுள்ளார். 

இதற்கு முன்னதாக கரோனா பாதிக்கப்பட்ட ஆறு பேரில் 5 பேர் வெளிநாட்டில் கப்பலில் பணிபுரிந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT