வாஷிங்டன்: கரோனா அதிகம் பாதித்த இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் அதிகம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு எதிரான போர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மட்டும் சுமார் 40 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே இது மிகப்பெரிய சாதனையாக உள்ளது என்று கூறினார்.
கரோனா கடுமையாக பாதித்திருக்கும் பிரான்ஸ், பிரிட்டன், தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்ட்ரியா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், கனடா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டாலும் கூட அதை விட அதிகமாக அமெரிக்காவில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கர்கள் மிகக் கடினமான விஷயங்களை செய்து முடித்துள்ளனர். அதன் மூலம் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். நாம் பாதுகாப்பாக இருக்கிறோம், நாம் எதையும் மூட வேண்டிய அவசியமில்லை, எதையும் மூடப்போவதும் இல்லை, ஆனால் நாம் மிக அழகானப் பணியை, மிகச் சிறப்பாக செய்து முடிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி இதுவரை 7 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 40 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 71 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.