உலகம்

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்குத் தடை: டிரம்ப் முடிவு

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

DIN

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்குத் தற்காலிகமாக தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக  அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 7,92,759 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42,514 பேர் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. எனவே, அமெரிக்காவில் தீவிரமாகப் பரவி வரும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதன் ஒருபகுதியாக, அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகவும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுக்காகவும், வெளிநாட்டவர்கள், அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட இருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT