உலகம்

அருமையான தாயகம் பற்றிய நிழற்படக் கண்காட்சி

DIN

வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கமும் யுன்னான் மாநில அரசும் கூட்டாக ஏற்பாடு செய்த 9ஆவது சீன-தெற்காசிய சர்வதேசப் பண்பாட்டு கருத்தரங்கு தொடர்பான நடவடிக்கைகளில் ஒன்றான “அருமையான தாயகம்” பற்றிய நிழற்படக் கண்காட்சி அண்மையில் இணையத்தின் வழி தொடங்கியது. அப்போது, இச்சங்கத்தின் தலைவர் லின் சாங்டியன் உரை நிகழ்த்தினார்.

இக்கண்காட்சியில் உள்ள அழகான படங்களின் மூலம் தெற்காசிய நாடுகளின் மக்களுக்கு மன மகிழ்ச்சி கிடைப்பதுடன், புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பில் அவர்களின் நம்பிக்கையையும் அது வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

சீன மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 85 புகைப்படக்காரர்களின் அருமைடான 111 படைப்புகள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT