உலகம்

உலகின் கூரை என பீடபூமியில் அதிசய சாதனைகளை உருவாக்கிய திபெத்

DIN

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் கடந்த 5  ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் வரலாற்று சாதனைகள் அடுத்தடுத்து படைக்கப்பட்டுள்ளன.

உலக கூரை என்று அழைக்கப்படும் பீடபூமியில், ஒன்றை ஒன்று பின் தொடர்ந்து வரும் அதிசயமான வளர்ச்சிச் சாதனைகள் உருவாக்கப்பட்டு வருகிறன. 2019ஆம் ஆண்டு திபெத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, 16970 கோடி யுவானை எட்டியது.  பொருளாதார அதிகரிப்பு விகிதம், தொடர்ந்து 7ஆவது ஆண்டாக முழு நாட்டின் 3 இடங்களுக்குள் வகித்தது.

திபெத் பொருளாதார சமூக வளர்ச்சியில்,  மக்கள் முதன்மை என்ற  வளர்ச்சிக் கோட்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளில் திபெத்தில் 90க்கும் மேலான நிதி,  அடிமட்ட மற்றும் மக்கள் வாழ்க்கை தொடர்பான துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், திபெத்தில் வசிக்கும் பல்வேறு இன மக்கள் உண்மையான நலன்களைப் பெற உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனுபவித்து வரும் மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு உணர்வு மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அனைவரையும், அனைத்து தேசிய இனங்களையும் குறிப்பிட்ட வசதியான சமூகத்தில் உள்ளடக்குவது என்ற இலக்கிற்காக, சீனா முயற்சி செய்து வருகிறது. தற்போது,  திபெத் முழுவதிலும் உள்ள 74  வறிய வட்டங்கள் அனைத்தும், வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள. குறிப்பாக, 6லட்சத்து 28ஆயிரம் பேர் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பொருளாதாரச் சமூக வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் போக்கில், திபெத், உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உயிரின வாழ்க்கை சூழலின் ஆக்கப் பணியை மேலும் முனைப்பான இடத்தில் வைத்து, திபெத், நிதி ஒதுக்கீடு , சட்ட விதிகளை உருவாக்குதல் ஆகிய துறைகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

மக்களின் வாழ்க்கை தர மேம்பாட்டை பொருளாதாரச் சமூக வளர்ச்சியின் ஆரம்ப மற்றும் கடைசி குறிக்கோள்களை கொண்டுச் செயல்படுத்தும் விதமாக, நவீன புதிய திபெத்தை உருவாக்க வேண்டும் என்று சமீபத்தில் நடைபெற்ற திபெத் பணிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், திபெத் புதிய வளர்ச்சிச் சாதனைகளைப் படைத்து, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் மக்கள் மேலும் அருமையான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT