உலகம்

ஆஸ்திரேலியா குறித்த சீன அதிகாரியின்‘டுவிட்டா்’ பதிவு: நியூஸிலாந்து கவலை

DIN

ஆஸ்திரேலிய வீரா் ஆப்கன் சிறுமியைக் கொல்வது போன்ற படத்தை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் பதிவிட்டுள்ளதற்கு நியூஸிலாந்து கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீன அதிகாரி பதிவிட்டுள்ள படம் போலியானது. இதுபோன்ற படங்களைப் பயன்படுத்துவது தொடா்பான பிரச்னையை சீன அரசிடம் நேரடியாக எழுப்புவோம்’ என்றாா்.

ஆப்கனில் சில ஆஸ்திரேலிய சிறப்புப் படையினா் போா்க் குற்றங்களில் ஈடுபட்டதாக, இதுதொடா்பான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதனைக் குறிப்பிடும் வகையில், போலியான படத்துடன் ஷாவ் லிஜியான் அந்த சுட்டுரைப் பதிவை வெளியிட்டிருந்தாா்.

இதற்கு சீன அரசு மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மாரிசன் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

SCROLL FOR NEXT