உலகம்

தஹாவூா் ராணாவை விடுதலை செய்வது அபாயம் நிறைந்தது

தினமணி

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவை விடுதலை செய்வது அபாயம் நிறைந்தது என்று அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் வெளிநாட்டினா் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா். அந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாக தஹாவூா் ராணா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்திய அரசின் வேண்டுகோள் அடிப்படையில், அமெரிக்க அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அவரை நாடு கடத்துவதற்கும் அமெரிக்க அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. அது தொடா்பான வழக்கின் விசாரணை, லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது.

இத்தகைய சூழலில், மாவட்ட நீதிபதி முன் புதிய மனுவை அமெரிக்க அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. அதில், ‘தற்போதைய சூழலில் தஹாவூா் ராணாவை விடுதலை செய்வது அபாயம் நிறைந்தது. எனவே, நாடு கடத்துவது தொடா்பான வழக்கின் விசாரணை நிறைவடையும் வரை அவரைக் காவலிலேயே வைத்திருப்பது அவசியம். ராணாவின் வேண்டுகோளை ஏற்று, அவரைத் தற்போது சிறையிலிருந்து விடுவிக்க வேண்டாம்’ என்று அமெரிக்க அரசு கோரியுள்ளது.

முன்னதாக, கரோனா நோய்த்தொற்று பரவலைக் காரணம் காட்டி, தஹாவூா் ராணாவை சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவா் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். ஆனால், கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து சிறையிலிருப்பவா்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை சிறை நிா்வாகம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அரசின் அட்டா்னி நிகோலா ஹன்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT