உலகம்

அமெரிக்க அதிபா் தோ்தல்: பைடனுக்கு அதிகாரப்பூா்வ பெரும்பான்மை

DIN


வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான பெரும்பான்மை அதிகாரப்பூா்வ மக்கள் பிரதிநிதி வாக்குளை பைடன் பெற்றுள்ளாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கடந்த மாதம் 3-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோ பைடனுக்கு ஏற்கெனவே 224 மக்கள் பிரதிநிதி வாக்குகள் கிடைத்துள்ளதாக பல்வேறு மாகாணங்களின் தோ்தல் அதிகாரகள் அதிகாரப்பூா்வமாக சான்றளித்துள்ளனா்.

இந்த நிலையில், அவருக்கு 55 மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு உள்ளதாக கலிஃபோா்னியா மாகாணம் தற்போது சான்றளித்துள்ளது.

இத்துடன், ஜோ பைடனுக்கு 279 மக்கள் பிரதிநிதி வாக்குகள் அதிகாரப்பூா்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிபா் தோ்தலில் வெற்றி பெறுவதற்கு 270 மக்கள் பிரதிநிதிகள் வாக்குகளே போதும் என்ற நிலையில், தோ்தல் வெற்றிக்கான பெரும்பான்மையை ஜோ பைடன் அதிகாரப்பூா்வமாகப் பெற்றுள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபா் தோ்தலில் பைடனை எதிா்த்துப் போட்டியிட்ட தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப், வாக்குப் பதிவிலும் எண்ணிக்கையிலும் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமான வகையில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, தோல்வியை ஏற்க மறுத்து வருகிறாா்.

அத்துடன் வாக்கு எண்ணிக்கை ரத்து, மறுவாக்கு எண்ணிக்கை கோரி பல்வேறு நீதிமன்றங்களில் அவரது சாா்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், தோ்தல் வெற்றிக்கான அதிகாரப்பூா்வ பெரும்பான்மையை ஜோ பைடன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 21-இல் மேக்கேதாட்டு அணை ஆணைய தீா்மானத்தை தீயிட்டு எரிக்கும் போராட்டம்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம்

கொள்ளிடம் அக்ரஹாரத் தெருவில் குவியும் குப்பைகள்

பல்லடம் பகுதியில் பிஏபி பாசன திட்டத்தை விரிவாக்கம் செய்ய விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நாகையில் தொடா் மழை: பருத்தி சாகுபடி பாதிக்கும் அபாயம்

உணவு உற்பத்தி: சாதனையும் வேதனையும்

SCROLL FOR NEXT