FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத கரோனா வைரஸ்: 36 பேர் பாதிப்பு

கரோனா வைரஸால் பாதிக்கப்படாத ஒரே கண்டமாக இருந்த அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 22 டிசம்பர் 2020, 4:54 pm IST
அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத கரோனா வைரஸ்: 36 பேர் பாதிப்பு(கோப்புப்படம்)
பகிர்:

கரோனா வைரஸால் பாதிக்கப்படாத ஒரே கண்டமாக இருந்த அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 190க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா தொற்று பாதிப்பில் சிக்கி தவித்து வருகின்றன. எனினும் அண்டார்டிகா கண்டத்தில் மட்டும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது.

அண்டார்டிகா கண்டத்தில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லை என்றாலும், 1,000 ஆராய்ச்சியாளர்களும் பிற பணியாளர்களும் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் அண்டார்டிகாவில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினரிடையே கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. சிலி ஆராய்ச்சி தளத்தில் உள்ள பாதுகாப்புப் படையினரின் உறுப்பினர்கள் 26 பேருக்கும், பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த 10 ஊழியர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அண்டார்டிகா பகுதியில் இருந்து திரும்பிய அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 36 பேருக்கு தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் சிலியில் உள்ள புன்டா அரினாஸ் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அண்டார்டிக்கில் உள்ள அனைத்து முக்கிய ஆராய்ச்சி திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி தடைபட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments