உலகம்

ஆப்கன் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்பு: 2 பாதுகாப்புப்படை வீரர்கள் பலி

DIN

ஆப்கன் தலைநகரில் நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப்பில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் பலியானார்கள்.
தலைநகர் காபூலின் சாமன் இ ஹோசூரி பகுதியில் முதல் குண்டுவெடிப்பு காலை 7:02 மணியளவில் நிகழ்ந்தது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 
அதைத்தொடர்ந்து காலை 7.05 மணியளவில் மேற்கு காபூலில் விஐபியின் பாதுகாப்பு பிரிவு வாகனத்தை குறிவைத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. 
இந்த தாக்குதலில் 2 காவலர்கள் காயமடைந்தனர். 
மூன்றாவதாக, கிழக்கு காபூலின் தே சாப்ஸ் பகுதியில் காவலர்களின் வாகனத்தை குறிவைத்து சாலையோரம் கிடந்த குண்டு வெடித்தது. இதில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர். 
தொடர்ந்து காலை 9.05 மணியளவில் மேற்கு காபூலின் தே போரி பகுதியில் காவலர்களின் வாகனத்தை குறிவைத்து மற்றொரு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. 
தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நிகழ்ந்த 4 குண்டுவெடிப்பு சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT