உலகம்

நார்வேயில் நிலச்சரிவு: 9 பேர் படுகாயம், 200 பேர் இடமாற்றம்

DIN

நார்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக 200க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நார்வே தலைநகரான ஓஸ்லோ பகுதியில் இன்று (டிச.30) அதிகாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

ஓஸ்லோ பகுதியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

உடனடியாக தகவலறிந்து 40க்கும் அதிகமான அவசர ஊர்தி வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றன. இதில் 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

வீடுகளை இழந்த 200-க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் நடுங்குகின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடல் புறா!

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

SCROLL FOR NEXT