உலகம்

நார்வேயில் நிலச்சரிவு: மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரம்

DIN

நார்வே நாட்டில் ஜெஜெர்ட்ரம் நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தெற்கு நார்வேயின் ஜெஜெர்ட்ரம் நகரத்தில் புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள 12க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் காயமடைந்தனர். இதுவரை 11 பேர் வரை நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிலச்சரிவு காரணமாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லோருக்கும் தேங்க்ஸ் - சிஎஸ்கே!

எம்.எஸ்.தோனி இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார்; பயிற்சியாளர் நம்பிக்கை!

கேஜரிவாலின் உதவியாளருக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா ஹைதராபாத்?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

SCROLL FOR NEXT