உலகம்

கேரள சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த ரிசார்ட்டை மூடியது நேபாள அரசு

PTI


காத்மாண்டு: பாதுகாப்புக் குறைபாடு மற்றும் மோசமான நிர்வாகம் காரணமாக 8 கேரள சுற்றுலாப் பயணிகள் மரணம் அடைந்த ரிசார்ட்டின் உரிமத்தை 3 மாதங்களுக்கு ரத்து செய்து நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் இருந்துச் சென்ற 15 சுற்றுலாப் பயணிகளில் ஒரே அறையில் தங்கிய 8 பேர் ஜனவரி 21ம் தேதி மூச்சுத் திணறி பலியானார்கள். 

இதற்கு, அந்த அறையில் இருந்து வெப்பமூட்டும் கருவியில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்டதே காரணம் என்று கண்டறியப்பட்டதை அடுத்து, விடுதி நிர்வாகம் மீது நேபாள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்த கேரளத்தைச் சோ்ந்த 8 போ் உயிரிழந்தது தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு 5 போ் கொண்ட குழுவை அந்நாட்டு அரசு அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த 15 போ், நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தனா். திரும்பும் வழியில் மகவான்பூா் மாவட்டத்தின் டாமன் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் திங்கள்கிழமை இரவு அவா்கள் தங்கினா். அந்த 15 பேரும் மொத்தமாக 4 அறைகளை தங்களுக்காக எடுத்துக்கொண்ட நிலையில், அதில் 8 போ் ஒரே அறையில் தங்கியுள்ளனா்.

அப்போது, சூடேற்றும் சாதனத்தில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒரே அறையில் தங்கிய இரு தம்பதிகள், அவா்களது 4 குழந்தைகள் என 8 பேரும் உயிரிழந்தனா். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT