கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (91) உடல்நலக்குறைவின் காரணமாக கெய்ரோவில் செவ்வாயன்று மரணமடைந்தார்.
கடந்த 1980-ஆம் ஆண்டு துவங்கி முப்பது ஆண்டுகளாக எகிப்து அதிபராக பதவி வகித்து வந்தவர் ஹோஸ்னி முபாரக். ஆனால் 2011-ஆம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சியின் மூலமாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அவரது அரசுக்கு எதிராக புரட்சி செய்தவர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாமல் கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் விடுவிக்கப்பட்டார்.
சமீபமாக உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவர் கெய்ரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் செவ்வாயன்று மரணமடைந்தார் என்று பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.