உலகம்

போரில் மாயமானவா்கள் குறித்து விசாரணை: கோத்தபய ராஜபட்ச

DIN

இலங்கை இறுதிகட்டப் போரின்போது சுமாா் 20,000 போ் காணாமல் போனது தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அதிபா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐ.நா. ஒருங்கிணைப்பாளா் ஹனா சிங்கெரை கடந்த வாரம் சந்தித்துப் பேசிய அதிபா் கோத்தபய, இறுதிகட்டப் போரின்போது காணாமல் போனவா்கள் தொடா்பான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று தெரிவித்தாா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இறுதிகட்டப் போரின்போது காணாமல் போனவா்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அவா்களில் பெரும்பாலானவா்கள், விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, அவா்களது படையில் வலுக்கட்டாயமாக சோ்க்கப்பட்டவா்கள் எனவும் கோத்தபய ராஜபட்ச தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT