உலகம்

துருக்கி நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரிப்பு

DIN

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. 

துருக்கியின் கிழக்கே அமைந்துள்ள எலாஸிக் மகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோலில 6.8 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டன. இந்த நிலடுக்கத்தில் கட்டங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பலர் சிக்கினா். 

இதில் எலாஸிக்கில் 18 பேரும், மலட்யாவில் 4 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. 1100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களில் 34 பேர் தீவிர சிகிச்சைப் பிரியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT