உலகம்

காரில் எலும்புக் கூடுடன் தினமும் அலுவலகம் சென்று வந்த அமெரிக்கர்: எதற்காக தெரியுமா?

DIN


அமெரிக்காவின் அரிஸோனா பகுதியில் காரில் ஓட்டுநரின் இருக்கைக்கு அருகே எலும்புக் கூடு ஒன்றுக்கு ஆடை, தொப்பி அணிவிக்கப்பட்டு, சீட்டோடு கட்டப்பட்டிருந்ததைப் பார்த்த போக்குவரத்துத் துறையினர், காரை ஓட்டி வந்தவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நான்கு சக்கர வாகனங்களை ஒருவர் மட்டுமே பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையில் இருந்து தப்பிக்க, ஒருவர் செய்திருக்கும் சதிதிட்டம்தான் இது.

தனது காரில், ஓட்டுநர் இருக்கைக்கு அருகே ஒரு எலும்புக் கூடுக்கு ஆடை அணிவித்து, அதற்கு தொப்பிப் போட்டு, இருக்கையோடு சேர்த்துக் கட்டியிருந்தார்.

இப்படியே பல நாட்களாக போக்குவரத்துத் துறையினரை ஏமாற்றி வந்தவர் தற்போது வசமாக சிக்கினார்.  இதுபோல, ஒரு ஆண்டு முழுவதும் சுமார் 7000 ஓட்டுநர்கள் விதிமீறலில் ஈடுபட்டு அபராதம் கட்டுவதாகவும், இதேப்போன்று எலும்புக் கூடு டிரிக்ஸை யாராவது பின்பற்ற நினைத்தால், அது நிச்சயம் நிறைவேறாது என்றும் போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

SCROLL FOR NEXT