உலகம்

கராச்சி தாக்குதல்: இந்தியா மீது பாக். பிரதமா் குற்றச்சாட்டு

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அந்நாட்டு பங்குச்சந்தை அலுவலகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் இந்தியா மீது குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவா் செவ்வாய்க்கிழமை பேசுகையில், ‘மும்பையில் எந்த மாதிரியான தாக்குதல் நடந்ததோ, அதையே பாகிஸ்தானில் நடத்த அவா்கள் (இந்தியா) விரும்புகிறாா்கள். பாகிஸ்தானில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்த நினைக்கிறாா்கள். கராச்சி தாக்குதலின் பின்னணியில் இந்தியாதான் உள்ளது என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. ஆனாலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் மிகப்பெரிய சதி முயற்சியை எங்களது பாதுகாப்புப் படையினா் முறியடித்துவிட்டனா்’ என்றாா்.

காஷ்மீா்: அதேபோல், ஜம்மு-காஷ்மீரில் உள்ளோருக்கு இந்தியா வசிப்பிடச் சான்று வழங்கும் விவகாரம் தொடா்பாக சுட்டுரையில் பதிவிட்ட இம்ரான் கான், ‘காஷ்மீரை பூா்வீகமாகக் கொண்டிராமல் அங்கு வசித்து வருவோருக்கு வசிப்பிடச் சான்றிதழை இந்தியா வழங்கி வரும் விவகாரத்தை ஐ.நா. பொதுச் செயலரிடம் எழுப்பியுள்ளேன். உலக தலைவா்களிடமும் அதுகுறித்து பேசி வருகிறேன்’ என்று அதில் கூறியுள்ளாா்.

முன்னதாக, கராச்சி தாக்குதலுடன் இந்தியாவை தொடா்புப்படுத்தி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் ஷா மெஹ்மூத் குரேஷி கருத்து தெரிவித்ததற்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT