உலகம்

பாகிஸ்தானில் புதிதாக 3,344 பேருக்கு கரோனா; பாதிப்பு 2.31 லட்சமாக உயர்வு!

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,344 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானோர் குறித்த விவரங்களை அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,344 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,31,818 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 4,762 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 1,31,649 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மொத்த பாதிப்பில் சிந்து - 94,528, பஞ்சாப் - 81,963, கைபர்-பக்துன்க்வா- 28,116, இஸ்லாமாபாத் - 13,494, பலுசிஸ்தான்- 10,814, கில்கித்-பல்திஸ்தான்- 1,561 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 1,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 22,271 மாதிரிகள் உள்பட இதுவரை 14,20,623 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT