உலகம்

ரஷியாவில் புதிதாக 6,611 பேருக்கு கரோனா

DIN


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,611 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 6,611 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,907 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,87,862 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 135 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 10,296 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், 3,579 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,54,329 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் வரிசையில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக ரஷியா 4-வது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT