உலகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு ஆலோசகருக்கு கரோனா தொற்று

DIN

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு ஆலோசகர் ஜாபர் மிர்சாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தொற்று பாகிஸ்தானிலும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் பிரமுகர்களும், பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு ஆலோசகர் ஜாபர் மிர்சாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ட்விட்டர் பக்கத்தில் அவர் இத்தகவலை உறுதி செய்துள்ளார். தனக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அதே நேரத்தில்  அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT