உலகம்

அமெரிக்காவில் ஒரேநாளில் 60,299 பேருக்கு கரோனா; 1,114 பேர் பலி

DIN

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கில் இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 60,209 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 29,91,351 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,114 பேர் உள்பட மொத்த உயிரிழப்பு 1,31,362 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை 13.55 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT