உலகம்

அமெரிக்காவில் ஒரேநாளில் 66,528 பேருக்கு தொற்று; மேலும் 760 பேர் பலி

DIN

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,528 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கில் இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 66,528 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 32,42,073 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 760 பேர் உள்பட மொத்த உயிரிழப்பு 1,34,729 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை 14.90 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT