உலகம்

சீன செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்: ஜப்பானில் எழும் கோரிக்கை 

DIN

ஜப்பான் மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஜப்பான் பிரதமரை அந்நாட்டின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் அகிரா அமரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த மாதம் டிக்டாக்,ஹெலோ உள்ளிட்ட 58 சீன செயலிகள் பாதுகாப்பு குறைபாடுகளைக் காரணம் காட்டி தடை செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை உலக அளவிலானகவனத்தை ஈர்த்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை பின்பற்றி சீன செயலிகளைத் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்தது.

இந்நிலையில் ஜப்பானை ஆட்சி செய்து வரும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான அகிரா அமரி சீன செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கோரி பிரதமர் சின்சோ அபேவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.  

டோக்கியோவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அகிரா, “ஜப்பான் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT