உலகம்

பாகிஸ்தானில் மேலும் 1,114 பேருக்கு தொற்று; பாதிப்பு 2.77 லட்சத்தைக் கடந்தது!

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,114 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,77,402 ஆக அதிகரித்துள்ளது. 

பாகிஸ்தானில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,114 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,77,402 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 32 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 5,924 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 2,46,131 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1,179 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

மொத்த பாதிப்பில் சிந்து மாகாணத்தில் - 1,20,052 , பஞ்சாப் - 92,655, கைபர்-பக்துன்க்வா- 33,845, இஸ்லாமாபாத் - 14,987, பலுசிஸ்தான்- 11,708, கில்கித்-பல்திஸ்தான்- 2,065 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 21,628 உள்பட இதுவரை 19,52,730 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT