உலகம்

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4,944 பேருக்கு தொற்று; மேலும் 136 பேர் பலி

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,944 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,65,062 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது: 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,944 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,65,062 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 136 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு 3,229 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 61,383 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மொத்த பாதிப்பில் பஞ்சாபில் 61,678, சிந்து - 62,269, கைபர்-பக்துன்க்வா- 20,182, பலுசிஸ்தான்- 8,998, இஸ்லாமாபாத் - 9,941, கில்கித்-பல்திஸ்தான்- 1,225 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 28,824 பரிசோதனைகள் உள்பட இதுவரை 1,011,106 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

நாகை எம்பி எம்.செல்வராசு காலமானார்

யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கோபி சி.கே.கே. மெட்ரிக். பள்ளி மாணவி 10ஆம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT