கோப்புப்படம் 
உலகம்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 305 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 305 பேர் பலியாகியுள்ளனர். 

DIN

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 305 பேர் பலியாகியுள்ளனர். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 305 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,19,959 ஆக அதிகரித்துள்ளது. 

அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 22,78,373 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 9.80 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாள் ஒன்றுக்கு பலி எண்ணிக்கை சராசரியாக 800 ஆக இருந்த நிலையில், சமீபமாக பலி எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT