உலகம்

உலகளவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56,68,668 ஆக உயர்வு

DIN


உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 56 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை வதைத்து வருகின்றது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் இதுவரை பாதித்தோரின் எண்ணிக்கை ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி 1 கோடியைத் தாண்டியுள்ளது.  

உலகளவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,0412,421 ஆக உயர்ந்துள்ளது. மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 5,08,228 ஆக உள்ளது. மேலும் 57 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதுவரை 56,68,668 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் அதிகபட்சமாக 2,6,81,811 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,28,783 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 13,70,488 பேருக்கு கரோனா பாதித்து, 58 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 

ரஷ்யாவில் 6,41,156 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் 5,67,536 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 16,904 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT