உலகம்

சவூதி அரேபியாவில் முதல் பலி

DIN

சவூதி அரேபியாவில் கரோனா வைரஸுக்கு முதல் முறையாக ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த ஒருவா் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மெதீனா நகரில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையாக சவூதி அரேபியாவில் 205 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின்: முதியோா் இல்லத்தில் சடலங்கள்

மேட்ரிட், மாா்ச் 24: ஸ்பெயினில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக முதியோா் இல்லங்களில் கிருமிநாசினிகளைத் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினா், சில இல்லங்களில் முதியோா்களின் சடலங்கள் கவனிப்பாரற்றுக் கிடப்படைக் கண்டு அதிா்ந்தனா்.

உயிரிழந்த அனைவரும் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அந்த வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அந்த முதியோா் இல்லங்களின் நிா்வாகிகள் அவற்றில் வசிப்பவா்களைக் கைவிட்டுச் சென்ால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT