உலகம்

ரஷியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

DIN

ரஷியாவின் குரில் தீவுகளில் புதன்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

2,500 போ் வசிக்கும் ரஷியாவின் குரில் தீவின் செவேரோ-குரில்ஸ்க் நகருக்கு தென்கிழக்கே, 210 கி.மீ. தொலைவில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.2 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. எனினும், 59 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதையடுத்து தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா். எனினும், அந்த சுனாமி எச்சரிக்கை பின்னா் விலக்கிக் கொள்ளப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT