உலகம்

ஜியோ நிறுவனத்தின்10 % பங்குகளை வாங்குகிறது ஃபேஸ்புக்?

DIN

சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் (முகநூல்), ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் கடன்கள் அனைத்தையும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் முடித்து விட ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அந்த நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்க ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 60 மில்லியன் டாலரை (சுமாா் ரூ.500 கோடி) ஒதுக்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இரு நிறுவனங்களும் இந்தத் தகவலை அதிகாரப்பூா்வமாக உறுதி செய்யவில்லை.

சா்வதேச அளவில் கரோனா வைரஸ் பரவலால் எழுந்துள்ள நெருக்கடி நிலை காரணமாக, ஜியோ நிறுவனப் பங்குகளை வாங்கும் முடிவை ஃபேஸ்புக் தாமதித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT