உலகம்

உச்சி மாநாட்டில் 20 நாடுகள் குழுவின் சாதனைகள் வெளியீடு

DIN

கொவைட்-19 நோய் பற்றி 20 நாடுகள் குழு உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் மார்ச் 26ஆம் நாள் கலந்து கொண்டார். இவ்வுச்சி மாநாட்டுக்குப் பின், சீனத் துணை வெளியுறவு அமைச்சர் மா சாவ்சு இம்மாநாட்டின் முன்னேற்றங்களை அறிமுகப்படுத்தினார்.

அவர் கூறுகையில்,

இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஷிச்சின்பிங் கொவைட்-19 நோய் தடுப்பு அனுபவங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டார். மேலும், இந்நோய் தடுப்பில் சர்வதேச அளவில் இருக்க வேண்டிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். தவிரவும் உலகப் பொருளாதாரத்தை நிதானப்படுத்துவது பற்றியும் முக்கிய கருத்துக்களை வழங்கினார் என்று மா சாவ்சு தெரிவித்தார்.

பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், இவ்வுச்சி மாநாட்டில் பெறப்பட்ட முக்கியமான முன்னேற்றங்கள் கீழ்வருமாறு: 

முதலாவது – வைரஸ் தடுப்பில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்பட்டுத்தி அறைகூவலைக் கூட்டாகச் சமாளிக்க பல்வேறு தரப்புகளும் வாக்குறுதி அளித்தன. கொவைட்-19 நோயைச் சமாளிப்பது தொடர்பாக சிறப்பு உச்சி மாநாட்டு அறிக்கையை 20 நாடுகள் குழு வெளியிட்டது. அதில், 20 நாடுகள் குழுவின் உறுப்பினர்கள் ஒற்றுமையாக நோய் அச்சுறுத்தலைச் சமாளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது - பல்வேறு தரப்புகள் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். வளரும் நாடுகளுக்கு, குறிப்பாக வளர்ச்சியடையாத நாடுகளுக்கு மருத்துவப் பொருள்கள் சென்றடைவதை உத்தரவாதம் செய்திட வேண்டும். 

மூன்றாவது- உலகப் பொருளாதார மற்றும் நிதித்துறையின்  நிதானத்தைப் பேணிக்காத்து சந்தையின் நம்பிக்கையை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்புகளும் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT