உலகம்

ஜி-20 உச்சிமாநாட்டில் ஷி ஜின்பிங்கின் உரை

DIN

கொவைட்-19 நோய் தடுப்பு பற்றிய ஜி-20 அமைப்பின் சிறப்பு உச்சிமாநாடு 26ஆம் நாளிரவு காணொளி மூலம் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,

தற்போது கொவைட்-19 நோய் உலகளவில் பரவி வருகின்றது. இந்நிலையில், உலக நாடுகள் மனவுறுதியுடன் சர்வதேச ஒத்துழைப்பைப் பன்முகங்களிலும் வலுப்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

மனித குலத்தின் பொது எதிர்கால சமூகம் என்ற கருத்துடன், வைரஸ் பரவல் தடுப்பு அனுபவங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டு, மருந்து மற்றும் தடுப்பூசி ஆய்வைக் கூட்டாக மேற்கொள்ளவும், நோய் பரவியுள்ள நாடுகளுக்கு இயன்ற அளவில் உதவி அளிக்கவும் சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

சிக்கலுக்குள்ளாகியிருந்த சீனாவுக்குப் பல நாடுகள் உதவிகளையும் இதயப்பூர்வமான ஆதரவையும் அளித்தன. இந்த நட்புறவைச் சீனா மனதில் பேணிமதிக்கின்றது. நோய் பரவல் மனதரின் பொது எதிரி. கொவைட்-19 நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தகவல்கள் தொடர்பான இணையத்தளத்தைச் சீனா நிறுவியுள்ளது. இதனை உலகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஷி ஜின்பிங் குறிப்பிட்டார்.

மேலும், கரோனா வைரஸ் பரவல் உலக உற்பத்தி மற்றும் தேவைத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடையாமல் தவிர்க்கும் விதம் பல்வேறு நாடுகள் ஒட்டுமொத்த கொள்கை என்ற ரீதியில் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பயன் தரும் நிதி மற்றும் நாணயக் கொள்கைகளை மேற்கொண்டு, நிதித் துறையின் மீதான கண்காணிப்பை ஒருங்கிணைத்து உலகத் தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலியின் நிலைத் தன்மையைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்று ஷி ஜின்பிங் முன்மொழிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின பேரணி

காரைக்குடி - பெங்களூா் இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கவேண்டும்

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

தமிழ் தேசியக் கட்சி மாநிலச் செயலரை தாக்கியவா் கைது

கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT