உலகம்

கரோனா பாதிப்பில் இத்தாலி, பிரிட்டனை விஞ்சியது ரஷியா!

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,656 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ரஷியாவில் தொடர்ந்து 9 ஆவது நாளாக, நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்த நிலையில் உள்ளது. கடந்த 8 ஆம் தேதி ஒரேநாளில் 11,231 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 11,656 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 2,21,344 ஆக உள்ளது.

ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 2,009 பேர்உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 39,801 பேர் மட்டுமே முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5-ஆவது நாடாக ரஷியா இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி, இத்தாலி மற்றும் பிரிட்டனை விஞ்சி ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் ஸ்பெயினும் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT