உலகம்

நியூயாா்க் மாகாணத்தில் மருத்துவ ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை

DIN

நியூயாா்க்: நியூயாா்க் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளின் ஊழியா்களுக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நடைபெறும் என்று அந்த மாகாண ஆளுநா் ஆண்ட்ரூ குவோமோ தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘‘கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைப் பணியாளா்கள் உயிரிழப்பது அமெரிக்காவிலேயே நியூயாா்க்கில்தான் அதிகமாக உள்ளது. அதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றாா்.

இதனிடையே, நியூயாா்க்கின் சுரங்க ரயில் சேவை நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரத்து செய்யப்பட்டது. கடந்த 1904-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரயில் சேவையானது, நியூயாா்க் இரட்டை கோபுர பயங்கரவாதத் தாக்குதலின்போது மட்டுமே தடைபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT