உலகம்

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 913 பேருக்கு கரோனா; 101 பேர் பலி

DIN

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 913 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, அங்கு மொத்த பாதிப்பு 1,73,152 ஆக அதிகரித்துள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. தொடர்ந்து, ரஷியா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. 

அதேபோன்று ஜெர்மனியிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 913 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,73,152 ஐ எட்டியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 101 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 7,824 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அந்நாட்டில் சுமார் 1,51,700 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

அந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT