உலகம்

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 3,08,676-ஐ எட்டியது!

DIN

உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு சனிக்கிழமை காலை நிலவரப்படி 3 லட்சத்து 8 ஆயிரத்து 676 பேர் பலியாகியுள்ளனர். 

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாக 210 நாடுகளுக்குப் பரவி மக்களை வதைத்து வருகின்றது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த நோய்த் தொற்றால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

இந்த நிலையில், உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,29,407 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை உலகளவில் 3,08,676 ஆக உள்ளது. அதேசமயம் 17,61,062 நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் நாளுக்கு நாள் பலியும், பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் அதிகபட்சமாக 14,84,285 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 88,507 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT