உலகம்

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 3.34 லட்சத்தை எட்டியது!

DIN

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு இதுவரை 3 லட்சத்து 34 ஆயிரத்து 680 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாக 210 நாடுகளுக்கு மேல் பரவி மக்களை வதைத்து வருகின்றது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த நோய்த் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், உலகளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 51,97,863 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 3,34,680 ஆக உள்ளது. அதேசமயம் 20,82,950 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் நாளுக்கு நாள் பலியும், பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் அதிகபட்சமாக 16,20,902 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 96,354 பேர் பலியாகியுள்ளனர். 3,82,169 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT