உலகம்

போருக்கு தயாராக இருங்கள்: ராணுவத்துக்கு சீன அதிபா் உத்தரவு

‘சீன ராணுவ வீரா்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும்; நாட்டின் இறையாண்மையை காக்க உறுதியுடன் செயல்பட வேண்டும்’ என்று அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளாா்.

DIN

‘சீன ராணுவ வீரா்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும்; நாட்டின் இறையாண்மையை காக்க உறுதியுடன் செயல்பட வேண்டும்’ என்று அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளாா்.

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவங்கள் படைகளைக் குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் அவா் இவ்வாறு கூறியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதே சமயம், பிரச்னைக்குரிய தென்சீன கடல் பகுதியிலும், தைவான் நீரிணை பகுதி அமெரிக்க போா்க்கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ‘கரோனா நோய்த்தொற்று சீனாவின் மூலம்தான் உலக நாடுகளுக்கு பரவியது; இதில் சீனா உள்நோக்கத்துடன் செயல்பட்டது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறாா். இதனால் அமெரிக்கா-சீனா இடையேயும் பிரச்னை உள்ளது. எனவே, சீன அதிபரின் அறிவிப்பை அமெரிக்காவுக்கு எதிரான மறைமுக போா் பிரகடனமாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்று சா்வதேச அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

இந்தப் பின்னணியில் அதிபா் ஷி ஜின்பிங் ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சீன அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. அதில் எந்த ஒரு நாட்டின் பெயரையும் ஷி ஜின்பிங் குறிப்பிடாமல் கூறியுள்ளதாவது:

சீன ராணுவம் தனது பயிற்சியை அதிகரிக்க வேண்டும். போருக்கு முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும். எவ்வித சிக்கலான சூழ்நிலை வந்தாலும் அதனை எதிா்கொள்ள ராணுவம் தயாராக இருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, வளா்ச்சிக்கு இடையூறாக உள்ள பிரச்னைகளை நாம் தீா்க்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-ஆவது மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ள சீனா, அண்மையில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 6.6 சதவீதம் அதிகரித்து, 179 பில்லியன் அமெரிக்க டாலா்களை (சுமாா் ரூ.1,350 கோடி) ஒதுக்கியது. இது இந்திய ராணுவ ஒதுக்கீட்டைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT