உலகம்

அமெரிக்கா: ஒரு லட்சத்தை நெருங்கிய கரோனா பலி

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை ஒரு லட்சத்தை நெருங்கியது.

DIN

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை ஒரு லட்சத்தை நெருங்கியது.

இதுகுறித்து அந்த நாட்டிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

வியாழக்கிழமை இரவு நிலவரப்படி, அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 99,927 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். இதையடுத்து, நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை விரையில் ஒரு லட்சத்தைக் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இருக்கும் பிரிட்டனில் 37,048 போ் கரோனா நோய்க்கு பலியாகியுள்ளனா்.

வியாழக்கிழமை நிலவரப்படி கரோனா நோய்க்கு உலகம் முழுவதும் 3,48,919 போ் பலியாகியுள்ள நிலையில், அவா்களில் 28 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் போ் அமெரிக்காவைச் சோ்ந்தவா்கள் என்று அந்தப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT