உலகம்

உலகளவில் கரோனா தொற்றுக்கு 10.37 லட்சம் பேர் பலி 

DIN


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று பாதிப்புக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,61,22,892 பேர் குணமடைந்துள்ள நிலையில், 10,37,955 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 3,51,31,931பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,61,22,892 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 10,37,955 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 79,04,986 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 66,098 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 76,00,846 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,14,277 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொற்று பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு இதுவரை 101,812 பேர் உயிரிழந்துள்ளனர், மூன்றாம் இடத்தில் பிரேசில் (4,906,833), நான்காம் இடத்தில் ரஷியாவும் (1,204,502) உள்ளது. 

உயிரிழப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,46,011     பேர் உயிரிழந்துள்ளனர். 

கொலம்பியா (8,48,147), பெரு (824,985), ஸ்பெயின் (810,807), அர்ஜென்டினா (790,818), மெக்சிகோ (757,953), தென்னாப்பிரிக்கா (679,716), பிரான்ஸ் (606,625), இங்கிலாந்து (480,017), சிலி (468,471), ஈரான் (468,119), ஈராக் (375,931) பங்களாதேஷ் (367,565), சவுதி அரேபியா (335,997) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

SCROLL FOR NEXT