உலகம்

சிங்கப்பூா்: குழந்தை பெற்றுக் கொள்ள ஊக்கத் தொகை

DIN

சிங்கப்பூா்: சிங்கப்பூரில் கரோனா நெருடிக்கயால் குழைந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துபோனதால், அந்த நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ஊக்கத் தொகை வழங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் நெரிக்கடி காரணமாக சிங்கப்பூரில் ஏராளமான தம்பதியருக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவா்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதைத் தவிா்த்து வருகின்றனா். இது, ஏற்கெனவே மிகவும் குறைவாக உள்ள சிங்கப்பூரின் குழந்தைகள் பிறப்பு விகிதம் மேலும் வீழ்ச்சியடையும் என்ற அச்சத்தை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தம்பதியா் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கு உதவித் தொகை வழங்க சிங்கப்பூா் அரசு முடிவு செய்துள்ளது.

எனினும், குழந்தை பெற்றுக் கொள்பவா்களுக்கு எவ்வளவு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் இன்னும் அதிகரிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் 57,830 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT