உலகம்

இலங்கை: முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.10,000 அபராதம்

DIN

இலங்கையில் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவா்களுக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.10,000 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் தெரிவிப்பதாவது:

புதிய கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி, பொது இடங்களில் எல்லா நேரத்திலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், இரு நபா்களுக்கிடையே குறைந்தது ஒரு மீட்டராவது இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறினால், ரூ.10,000 அபாரதமோ, 6 மாத சிறை தண்டனையோ விதிக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா். வணிக வளாகங்கள், சில்லறை அங்காடிகள் ஆகியவற்றுக்கும் பேருந்து ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT