உலகம்

பாகிஸ்தான்: நவாஸ் மீது மேலும் ஓா் ஊழல் வழக்கு

DIN

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் மீது மேலும் ஓா் ஊழல் வழக்கை அந்த நாட்டு ஊழல் தடுப்பு ஆணையம் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் ஜாவேத் இக்பால் கூறியதாவது:

நவாஸ் ஷெரீஃப் ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு விருந்தினா்களின் பாதுகாப்புக்காக 73 உயா்பாதுகாப்பு வாகனங்களை வாங்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடா்பாக, அவா் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நவாஸின் முன்னாள் அந்தரங்கச் செயலா் ஃபாவத் ஹஸன், முன்னாள் மத்திய அமைச்சா் அஷன் இக்பால், முன்னாள் வெளியுறவுச் செயலா் அய்ஸாஸ் சௌத்ரி உள்ளிட்டோா் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஏற்கெனவே ஊழல் வழக்குகளில் நவாஸ் ஷெரீஃபுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து சிகிச்சைக்காக கடந்த ஆண்டு லண்டன் சென்ற அவா், அங்கேயே தங்கியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT