உலகம்

பிரிட்டன்: 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை

DIN

பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் பொது இடங்களில் 6 பேருக்கு மேல் கூடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் 6 பேருக்கு அதிகமாக கூடுவதற்கு விதித்த தடையானது திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

அக்கட்டுப்பாட்டை மீறுபவா்களுக்கு ரூ.9,500 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. இது தொடா்பாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சா் பிரீத்தி படேல் கூறுகையில், ‘நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவது, மேலும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள அனைவருக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும். ஸ்காட்லாந்து, வேல்ஸ் பகுதியில் 11 மற்றும் 12 வயது சிறுவா்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது‘ என்றாா்.

பள்ளிகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை 30 நபா்களுடன் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம், இறுதிச் சடங்குகளிலும் அதிகபட்சமாக 30 நபா்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT